இது கிரிக்கட். இறுதிப்பந்து வரை எதையும் சொல்லமுடியாதாம். உண்மைதான். இன்று ஆஸ்திரேலியாவின் 'பேர்த்' இல் உள்ள 'வகா - (WACA- Western Australia Cricket Association)மைதானத்தில் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரு அபார வெற்றியை பெற்றுள்ளது. இது ஆஸ்திரேலியர்களின் டெஸ்ட் நிலையை சற்று ஆட்டம் காண செய்துள்ளது. ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என் இரண்டிலும் அசத்தி வந்த ஆஸ்திரேலியா இப்போதெல்லாம் சரிவுகளை மட்டுமே சந்தித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் ஆரம்ப துடுப்பாட்ட முதுகெலும்பாகிய மத்யூ ஹைடன் அண்மைக்காலமாக சொதப்பியே வருகிறார். இது ஆஸ்திரேலியர்களுக்கு பெரிய தலையிடி. அவர் நல்ல நிலைக்கு (போர்ம்) திரும்பாதது கவலையே. அதேபோல மைக்கல் ஹசி யினதும் பொண்டிங்கினதும் பெறுபேறு இந்தப்போட்டியில் சோபிக்கவில்லை. இது அவர்களை துடுப்பாட்டத்தில் பெரிதும் சரிவை கொடுத்தது. ஹைடன் (12,4) , பொண்டிங் (0,32) , ஹசி (0,8). ஆனாலும் இரண்டு இன்னிங்ஸ்சிலும் பின்வரிசை வீரர்களின் பொறுப்பான(?) தடாலடி ஆட்டம் அவர்களைக் காப்பாற்றியது. குறிப்பாக விக்கட் காப்பாளர் பிராட் ஹடின் பெற்ற 46+94 மற்றும் ஜேசன் கிறேசா பெற்ற 30* + 32 என்பவை முக்கியமானது. பொதுவாக சொன்னால் ஆஸ்திரேலியர்கள் துடுப்பாட்டத்தில் பெரிதாக சாதிக்கவில்லை என்றே சொல்லலாம்.
முதல் இன்னிங்ஸ்சில் பந்துவீச்சில் மக்காயா என்ரினி 4விக்கட்டுக்களை சாய்த்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேல் ஸ்ரைன் 2 விக்கட்டுக்களை பெற்றார்.
தென்னாபிரிக்காவும் ஆஸ்திரேலியர்களுக்கு நாம சளைத்தவர்கள் அல்ல என முதல் இன்னிங்ஸ்சில் தடுமாறினர். ஆனால் அவர்கள் வலுவான நிலையில் இருந்தனர். அதாவது ஒரு நிலையில் 234-3. ஆனால் பின்னர் மிச்சல் ஜோன்சனின் வேகம் அவர்களை நிலைகுலைய வைத்தது. 281 ற்கே ஆட்டமிழந்துவிட்டனர். கலிஸ்-63, டிவில்லியேர்ஸ்-63, ஸ்மித்-48, அம்லா-47. ஜோன்சன் தனது சிறப்பு பெறுதியாக வெறும் 61 ஓட்டங்களை கொடுத்து 8 விக்கட்டுக்களை அள்ளி எடுத்தார். இப்போ ஆஸ்திரேலியா 94 ஓட்டங்கள் முன்னிலையில்.
இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் ஆஸ்திரேலியா துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டது. ஒரு கட்டத்தில் 162/7 என்ற மோசமான நிலையில் இருந்தனர். அப்பொழுது அவர்கள் 256 ஓட்டங்கள் மட்டும் முன்னிலையில் இருந்தனர். பின்னர் ஹடின் பின்வரிசை சகபாடிகளுடன் இணைந்து அசத்தி ஆஸ்திரேலியாவை 319 வரை உயர்த்தி வெற்றிக்கான இலக்கை 414 என நிர்ணயித்தார். பந்து வீச்சை பொறுத்தவரை எல்லோரும் தம்பங்கை சிறப்பாகவ்வே செய்தனர்.
வெற்றி இலக்கு 414. தென்னாபிரிக்கா ஒருவித நம்பிக்கையுடன் களமிறங்கியது. மக்கன்ஸி (2+10) மீண்டும் ஏமாற்ற, மீண்டும் ஸ்மித் மற்றும் அம்லா ஜோடி இணைந்து ஆஸ்திரேலியாவை மிரட்டியது. சிறப்பாக ஆடினர். பொண்டிங் ஜோகன்னர்ஸ்பேர்க் 438 ஓட்டங்களை வாழ்வில் மறக்கமாட்டார். அந்த உணர்வை மீண்டும் பெறத்தொடங்கினார் போலும். மனுஷன் களத்தில் விரல் நகங்களை கடித்து துப்பிய வண்ணமே இருந்தார் (போட்டிக்கு முன்னர் வளர்ப்பாரோ?). இந்த ஜோடி 153 ஓட்டங்களை பகிர்ந்தது. இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தென்னாபிரிக்கா இப்போது 179-3. இப்போது கலிசும் டிவில்லியர்ஸ்சும் தலையிடி கொடுத்தனர். இந்த ஜோடியும் அபாரமாக ஆடி வெற்றியை நோக்கி பயணித்தது. 124 ஓட்டங்களை இணைப்பாக பெற்றதும் கலிஸ் ஆட்டமிழந்தார். அப்போது நிலை 303-4. பரபரப்பான சூழலில் தனது கன்னி போட்டியில் விளையாடும் போல் டும்னி டீவில்லியர்ஸ் உடன் இணைந்து அபாரமாக ஆடி வெற்றியை எட்டினர். டிவில்லியர்ஸ் அற்புதமான சதம் பெற்றார்(106*). இவ்வேளை டும்னியோ வெற்றிக்கான ஓட்டங்களை பெற்றதோடு தனது அரை சதத்தையும் எட்டினார்(50*). வெறும் 4 விக்கட்டுக்களை மட்டும் இழந்து அவர்கள் தமது வெற்றி இலக்கான 414 இனை எட்டினர். ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் தென்னாபிரிக்கா அதிர்ச்சி வைத்தியம் பார்த்தனர். எதிர்பாராத ஆனால் அற்புதமான வெற்றி தென்னாபிரிக்காவிற்கு. இரண்டு இமாலய இலக்குகளை தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெற்று சாதனை படைத்துள்ளது. ஒன்று ஜோகன்னஸ்பேர்க்கில் பெற்ற 438. மற்றையது இன்று. ஆனால் முதலாவது ஒருநாள் போட்டியில். இரண்டாவது டெஸ்ட் போட்டியில்.
டிவில்லியர்ஸ்சின் அற்புதமான துடுப்பாட்டத்திற்கும் அவரது அபாரமான களத்தடுப்பிற்குமாக ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
* டெஸ்ட் வரலாற்றில் 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெற்ற இரண்டாவது பெரிய வெற்றி. முதலாவது மேற்கிந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 418 இனை சென்ற்.ஜோன்ஸ் அன்ரிகுவாவில் பெற்றது.
*ஸ்மித் இப்போது 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெற்ற சாராசரி ஆனது கிரிக்கட் வரலாற்றில் மூன்றாவது நல்ல பெறுதி. முதலாவது ஜெவ்ரி போய்கொட், மற்றும் சுனில் கவாஸ்கர். ஆனால் ஸ்மித் 4வது இன்னிங்ஸ்சில் 3 சதம் பெற்றுள்ளார். இந்த 3 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வென்றுள்ளது.
டெஸ்ட் போட்டிகளும் எப்போதும் விறுவிறுப்பானவை என அண்மைக்காலப் போட்டிகள் நிரூபித்துள்ளன. அதற்கு சிகரமாக இந்தப் போட்டி அமைந்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா இப்போது 1-0 என்று முன்னிலை. ஆஸ்திரேலியா அசத்துமா? அல்லது அமிழ்ந்து போகுமா பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்தது 'பொக்சிங் டே' (டிசம்பர் 26) போட்டி மெல்பேர்னில் நடைபெறும்.
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்......!
4 கருத்துகள்:
HAY DA...
CRCKET AI EPPADI UNNAI THAVIRA VERU ORUVARAALUM RASIKKA MUDIYAATHU,,, THODARNTHUM ELUTHU... INDIA VUM VELLUTHU ATHU PATTI ELUTHA MAADEENKALA?
RATHAN
நன்றி ரதன், வருகைக்கும் இடுகைக்கும். உங்களைப் போன்றவர்களின் ஆதரவுக்கரம் இருப்பதால்தான் இந்த சிறிய முயற்சியை மேற்கொள்கிறேன். இந்தியா வெற்றி பற்றி நிச்சயமாக பதிவு வரும் நண்பா. காத்திரு. நன்றிகள்.
அவுஸ்திரேலியா என்ற பெயர் மீது இருந்த நடுக்கம் இப்போது ஒருவருக்கும் இல்லை. எல்லா அணிகளும் ஒரு கை பார்ப்போம் என்று ஆடுவதால் இப்படி சில அருமையான போட்டிகளை பார்க்க முடிகின்றது. வேகப்பந்துக்கு கைகொடுக்குக்கும் WACA வில் ஒரு அருமையான வெற்றி
நன்றி அருண்மொழிவர்மன், உங்கள் வருகைக்கும் இடுகைக்கும். நீங்கள் சொன்னதுபோல ஆஸ்திரேலியா மீதான பயம் படிப்படியாக எல்லோருக்கும் குறைந்து கொண்டு போகிறது. இது தொடர்ந்தால் அவ்வளவு நல்லதல்ல. "தோல்வியில் இருந்து யாரும் தப்ப முடியாது" என்ற பொதுவான் விதிக்கு இப்போது ஆஸ்திரேலியா அகப்பட்டுத் துடிக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி!!
கருத்துரையிடுக