புதன், 17 டிசம்பர், 2008

ராகுல் ட்ராவிட்: காலம் முடிகிறதா...?


1996ம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடிய போது இரண்டு புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஒருவர் சவுரவ் கங்குலி. இன்னுமொருவர் ராகுல் ட்ராவிட். முன்னவர் வங்கதேசம் பின்னவர் கர்நாடக மாநிலம்.

இந்த இருவரும் தமக்கு தந்த பணியை செவ்வனே செய்தனர். கங்குலி ஓய்வும் பெற்றுவிட்டார். ஆனால் ட்ராவிட் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் அதேவேளை அவருக்கான ஓய்வு நேரம் நெருங்குகிறதா? அல்லது கட்டாய ஓய்விற்கு தள்ளப்படுவாரா என்ற பல கருத்துக்கள் எழுந்துள்ளது.

இந்தியாவின் துடுப்பாட்ட சுவர் (BATTING WALL) என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். நிதானமாக தொடங்குவார். பின்னர் களத்தில் இவர் நின்றால் ஓட்டம் ஏறுவது தெரியாது. அதிரடியும் இல்லை. ஆமை வேகமும் இல்லை. நிதானமாக ஓட்டங்களை குவித்து எதிரணியை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவார். இவரால் இந்தியா பெற்ற வெற்றிகள் ஏராளம். ஏன் தனித்து நின்றே வெற்றிகளைக் குவித்து இருக்கிறார். அப்துல் ஜபார் தமிழில் அழகாக சொல்வதானால் மிகச்சிறந்த மட்டையாளர்.

சிறிதுகாலமாகவே ட்ராவிட் உடைய மட்டை ஓட்டங்களை சேகரிக்க தவறுகிறது. காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இது ட்ராவிட்டுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஏன் தேர்வாளர்களுக்கு கூட சங்கடமாகத்தான் இருக்கிறது. அற்புதமான வீரர். Class is Permanent. Form is Temporary. ட்ராவிட் இடம் எப்போதும் தரம் இருக்கிறது. ஆனால் இப்போது நேரம் இல்லை. நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் இப்போது முன்பு மாதிரி இல்லை. 2006 ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கான் சுற்றுப்பயணத்தில் இருந்து இந்த பிரச்சினையை ட்ராவிட் எதிர் கொள்கிறார் என்றுதான் கூறவேண்டும். அதற்கு முன்னதாக மேற்கிந்தியாவிற்கெதிரான தொடரை வராலாற்று வெற்றியாக படைத்ததில் ட்ராவிட்டின் துடுப்பாட்டமும் தலைமைத்துவமும் காரணம்.

2006 இறுதியில் தென்னாபிரிக்கத் தொடரில் இருந்து கடைசியாக சென்னையில் நடந்த இங்கிலாந்திற்கெதிரான போட்டி வரை உள்ள தொடர்களின் பெறுபேறுகள் கொண்ட அட்டவனை கீழே உள்ளது.மேலுள்ள அட்டவணையில் இருந்து ட்ராவிட்டின் மோசமான பெறுபேறு பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். எல்லா காலத்திலும் எந்த துடுப்பாட்ட வீரனும் சாதிக்க முடியாதுதான். லாறா, சச்சின், பொண்டிங், சங்ககார போன்றவர்களும் சொதப்பித்தான் இருக்கிறார்கள். இவர்களை நினைத்து ரசிகர்களும் கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு தொடர்களுக்கு பிறகு தேறி விடுவார்கள். இப்போது ட்ராவிட் அப்படியும் இல்லை. போர்மில் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவரின் தரமான விளையாட்டிற்காகத்தான் இவ்வளவு நாளும் அணியில் சேர்த்திருந்தார்கள். அவர் மீண்டு வருவார் மீண்டு வருவார் என்றால் ட்ராவிட் மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்.

தென்னாபிரிக்காத் தொடருக்கு முன்னர் அவரது சராசரி 58.75 இப்போது அவரைப் பொறுத்தவரைக்கும் அதளபாதாளம். முன்பு தொடக்கத்திற்குத்தான் அதிக பந்துகளை சந்திப்பார். ஆனால் போகப்போக ஓட்டங்களை குவித்து 100 பந்துக்கான ஓட்டவீதத்தை(Strike Rate)நன்றாக பேணுவார். இப்போது துடுப்பாடும் போது கூட தெரிகிறது. தற்காப்பு ஆட்டமும், பதட்டத்துடனும் கூடிய நிதானமும் கொண்டதாக உள்ளது. சில வேளைகளில் ட்ராவிட் தானா இப்படி துடுப்பெடுத்தாடுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு துடுப்பாட்ட சுவர் சரிகிறது என்று எல்லோருக்கும் கவலை.

தேர்வாளர்களின் தலைவராக இப்போது ஸ்ரீகாந்த். இவர் மனது வைத்தாலே ஒழிய, மற்றபடி இந்த துன்ப நிலை நீடித்தால் ட்ராவிட் அடுத்த தொடருக்கு தெரிவு செய்யப்படுவது சந்தேகமே. ஏனெனில் புள்ளிவிபரங்கள் எல்லாம் ட்ராவிட்டுக்கு எதிராகவே உள்ளன. வரப்போகின்ற போட்டிகள் இந்தியா, இங்கிலாந்தை விட ட்ராவிட்டுக்கு கடும் சோதனையாக இருக்கும். சென்னையில் வெற்றி பெற்றதால் வெற்றி அணியை (WINNING COMBINATION) குலைக்காமல் விளையாடுவார்கள். ஒருவேளை தோற்றிருந்தால் நிலைமை வேறுமாதிரியாக மாறி இருக்கும்.

நல்ல துடுப்பாட்ட வீரனை இந்திய அணி இழக்கிறது என்ற வருத்தம் எல்லோரிடமும் உள்ளது. அதே நேரத்தில் வெளியே நிறைய இளைய வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராத் கோழி, விஜய், பத்ரிநாத், சுரேஷ் றைனா என நிறையவீரர்கள். ட்ராவிட் போல இவர்கள் எல்லாம் வருவார்களா? ட்ராவிட் இடத்தை நிரப்பமுடியுமா? என்றால் வாய்ப்பு கொடுத்துப்பார்த்தால்தான் தெரியும். அதேநேரத்தில் டோனியும் இளம் அணி இளம் அணி என அடம்பிடிப்பதால் தேர்வாளர்களும் அவர் பின்னால் நிறக நேரிடுகிறது. காரணம் இந்தியாவிற்கு எதிர்பாராமல் நிறைய வெற்றிகளைத் தேடித்தந்து விட்டார்

ஒருநாள் அணி. கதையே வேண்டாம் கனவில கூட ட்ராவிட் அந்த இடத்தை நினைக்க முடியாத அளவிற்கு துடுப்பாட்ட வரிசை உள்ளது. இப்போது பந்து ட்ராவிட்டின் துடுப்பை நோக்கி வீசப்படுகிறது. லாவகமாக தட்டிவிட்டு நான்கு ஓட்டத்தைப் பெற்று அணிக்குள் இருப்பாரா? அல்லது கிளீன் போல்ட் ஆகி வாழ்வை முடித்துக்கொள்வாரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

(மீண்டும் வருவேன் என்கிறாரா? அல்லது போகிறேன் என்கிறாரா?)
மீண்டு வரவேண்டும் அதுதான் எல்லோர் விருப்பமும். மீண்டும் வரும் நேரத்தில் அவரைப் பற்றி மீண்டும் எழுதவேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது.

28 கருத்துகள்:

DHANS சொன்னது…

இந்த தருணங்கள் அவருக்கு தற்காலிகமானவையே, அடுத்த போட்டியிலேயே மீண்டு வருவார் பாருங்கள்

கிடுகுவேலி சொன்னது…

மீண்டு வரவேண்டும் DHANS. அதுதான் எல்லோர் விருப்பமும். இது அவர் நிலைமை பற்றி எழுதியது மட்டும்தான்.

புருனோ Bruno சொன்னது…

// இவரால் இந்தியா பெற்ற வெற்றிகள் ஏராளம். //

எத்தனை என்று கூற முடியுமா

ஆனால் அதை விட அதிகம் வெற்றி சேவாகால் கிடைத்திருக்கிறது

ஆனால் அதை விட அதிகம் வெற்றி லக்‌ஷ்மணால் கிடைத்திருக்கிறது

ஆனால் அதை விட அதிகம் வெற்றி கங்குலியால் கிடைத்திருக்கிறது

ஆனால் அதை விட அதிகம் வெற்றி சச்சினால் கிடைத்திருக்கிறது

--

ஆனால் அதிக வெற்றி பெற்று தந்தவர் என்ற பெயர் திராவிட்டுக்கு மட்டுமே :) :)

--

கிடுகுவேலி சொன்னது…

நிச்சயமாக. ட்ராவிட் நிறைய போட்டிகளை வெல்ல காரணமாக இருந்திருக்கிறார். நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் அதில் இருப்பார்கள். ஆனால் ட்ராவிட்டும் இருப்பார் என்பதும் உண்மை. முன்னைய பதிவில் சொன்னது போல சச்சினா ட்ராவிட்டா மிகச்சிறந்த Match Winner என்று SPORTSTAR சஞ்சிகை நடாத்திய ஒரு விவாத்தில் எல்லோரும் ட்ராவிட்டைத்தான் சொன்னார்கள். சச்சின் வெற்றியின் காலை வாரிய போட்டிகளை பட்டியல் இட்டிருந்தார்கள். எல்லோரும் மிகச்சிறந்த மட்டையாளர்கள். ட்ராவிட் நிறைய தடவைகள் வெற்றிக்காக உதவி செய்திருக்கிறார்.நன்றி புருனோ வருகைக்கும் இடுகைக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

டிராவிடை அதிக வெற்றியை காவஸ்கரும் கபில்தேவும் பெற்றுத்தந்திருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.அதனால் அவர்களையும்.............

கிடுகுவேலி சொன்னது…

நிச்சயமாக சுரேஷ். ஆனால் இப்போது ட்ராவிட்டின் நிலைமை கருதித்தான் அப்படியான சொல்லாடல். எல்லோரும் வெற்றி பெற்றுத்தந்திருக்கிறார்கள். அணியாக விளையாடும் போது வெற்றி பெறும் நேரங்களில் ட்ராவிட்டின் உதவி கொஞ்சம் அதிகமாக இருந்தது என்றேன். நன்றி வருகைக்கும் இடுகைக்கும்.

Blogger சொன்னது…

//ஆனால் அதை விட அதிகம் வெற்றி சச்சினால் கிடைத்திருக்கிறது
Nice Joke.Dravid has won Many Test Matches and one day international Matches than any other Indian cricketer.Public Memory is Short.

Dont bash Cricketers when they are out of Form.We as Indian Public salute them when they do well and forget it at once.Remember what Dada went through when he was out of Form.Lets be mature Enough People.

அருண்மொழிவர்மன் சொன்னது…

நல்ல பதிவு. ராகுல் ட்ராவிட் என்கிற ஜாம்பவானின் சரிவுக்காலத்தில் எழுதப்பட்டது. நீங்கள் சொன்னது போல எல்லாருக்கும் இது போன்ற சரிவு வந்திருந்தாலும் இவர் அணியில் எல்லாரும் கலக்கும்போது தடுமாறுவதால் பெரிதாக தெரிகின்றது. லாரா, ஸ்டீவ் வா எல்லாரும் இதைவிட நீண்டகாலம் சொதப்பினவர்கள். அவர்கள் போல இவரும் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

இந்திய அணியில் ஒரு நாள் ஆட்டத்தில் வீரர்கள் கலக்கும் போது இவருக்கு பதிலாக அவர்களை சேர்க்கலாம் என்பது என்னை பொறுத்தவரை சரியில்லை. இபோதைய இந்திய அணியின் பெரும்பாலன வீரர்கள் அடித்தாடும் (stroke players) வீரர்கள். ட்ராவிட் போன்ற நின்று விளையாடும் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில்,அதுவும் பந்தைன் போக்கை கணிக்க முடியாத இந்திய மைதானங்களில் அவசியம்.

புருனோ Bruno சொன்னது…

//சச்சின் வெற்றியின் காலை வாரிய போட்டிகளை பட்டியல் இட்டிருந்தார்கள்//

அந்த போட்டிகள் அனைத்திலும் திராவிட்டும் காலை வாரியிருந்தார் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

(அவர் காலை வார வில்லை என்றால் அது வெற்றி ஆகியிருக்கும் என்ற எளிய உண்மையை வெளியில் தெரியாவண்ணம் ஊடகங்கள் வாயிலாக பரப்பியதே திராவிட்டின் சாதனை)

புருனோ Bruno சொன்னது…

// ட்ராவிட்டா மிகச்சிறந்த Match Winner என்று SPORTSTAR சஞ்சிகை நடாத்திய ஒரு விவாத்தில் எல்லோரும் ட்ராவிட்டைத்தான் சொன்னார்கள்.//

நான் என்ன கூறினேன்

அணிக்கு அதிக வெற்றி பெற்று தந்தவர் யார் என்று நீங்கள் score cardகளை எடுத்து பார்த்தால்

சச்சின் முதலிடத்திலும்
கும்ப்ளே இரண்டாம் இடத்திலும்
கங்குலி மூன்றால் இடத்திலும்
லக்‌ஷ்மன் நான்காம் இடத்திலும்
சேவாக் ஐந்தாம் இடத்திலும்

இருப்பார்கள்

cricinfo தளத்தில் இருக்கும் scorecardகளை வைத்து நீங்களே சரி பார்த்துக்கொள்ளலாம்

---

ஆனால் ஊடகங்களின் பரப்புரை வாயிலாக, (முழு விபரம் தெரியாத) யாரிடமாவது கேட்டால் அவர்கள் மிகச்சிறந்த Match Winner என்று திராவிட்டை கூற வைத்ததே இவரது மிகப்பெரிய சாதனை

புருனோ Bruno சொன்னது…

//ட்ராவிட் நிறைய தடவைகள் வெற்றிக்காக உதவி செய்திருக்கிறார்//

இதை நான் மறுக்கவே இல்லை

ஆனால் நான் கூறிய மற்றவர்களை கணக்கில் எடுத்தால் இவரது ”நிறைய தடவைகள்” மிக குறைவே என்று உங்களுக்கே தெரிய வரும்

--

சச்சினை குறை கூறும் 1999 சென்னை மற்றும், 1997 பார்படாஸ், 2003 உலககோப்பை இறுதி ஆட்டத்தில் இவரும் இருந்தாரல்லவா

--

ஆனால் சச்சினை விட அதிக ஆட்டங்கள் வெற்றி பெற்று தந்ததாக கட்டமைக்கப்ப்ட்டுள்ள இவர் காலை வாரிய போட்டிகளை பட்டியல் இல்லை

சிந்தியுங்கள்

ஊடக பரப்புரையின் மகிமை புரியும் :)

புருனோ Bruno சொன்னது…

//Nice Joke.Dravid has won Many Test Matches and one day international Matches than any other Indian cricketer.Public Memory is Short.//

நிருபியுங்கள் சார்

நீங்கள் கூறுவது தான் Public Memory is Short என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு

உங்கள் கருத்தை நிருபியுங்கள் பார்க்கலாம்

திராவிட்டால் இந்திய பெற்ற டெஸ்ட் வெற்றிகள் எத்தனை (இல்லை என்று நான் கூற வில்லை)
திராவிட்டால் இந்திய பெற்ற ஒரு நாள் வெற்றிகள் எத்தனை (இல்லை என்று நான் கூற வில்லை)

அதே போல் சச்சின், சேவாக், கங்குலி, லக்‌ஷ்மண் என்றும் பாருங்கள் என்று தான் கூறினேன்

நிருபியுங்களேன்.

ஏன் ஆதாரமில்லாமல் தொடர்ந்து தவறான தகவல்களையே கூறுகிறீர்கள்

புருனோ Bruno சொன்னது…

//Dont bash Cricketers when they are out of Form.//

அதே போல் குறைவான ஆட்டங்கள் வெற்றி பெற்று தந்தவரை அதிக ஆட்டங்கள் வெற்றி பெற்று தந்தவர் என்றும் கூறாதீர்கள்

//Remember what Dada went through when he was out of Form.Lets be mature Enough People.//

அப்படி பார்த்தால் அதே தாதா நன்றாக் விளையாடிக்கொண்டிருக்கும் போது ஒய்வு பெற வேண்டும் என்று கூறியது அநாகரிகமல்லவா

புருனோ Bruno சொன்னது…

// லாரா, ஸ்டீவ் வா எல்லாரும் இதைவிட நீண்டகாலம் சொதப்பினவர்கள்.//

:) :) :)

பாலு மணிமாறன் சொன்னது…

Nice post.

As a man who saw Dravid play his first oneday international live in Singapore, i feel sorry for him.

But life goes on. Dravid did got many more chance than all others , to come out of this dip in form. But he has not graped his chances.

To me, the selectors should have rested him for this England series and should have let him play in Ranji trophy to get some form back. But by letting him play in this series, they almost put an end to his playing career.Is it a tactics by the selectors?

If Dravid is rested for the next test, play some domestic matches to get in to form, he will get few more years to play. But, if he does play in it and fail, that will be the end of his wonderful career.

To me, all things that starts well should end well. Let GOD give chance to Dravid to end his playing days well !

Blogger சொன்னது…

@Bruno Read This Post.Looks like you beleive only in Statistics.So here is it.

http://therebelspeakz.blogspot.com/2008/04/rahul-dravid-greatest-cricketer-ever.html

கிடுகுவேலி சொன்னது…

புருனோ உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் நினைத்தாற்போல் அதை நிரூபிப்பதற்கு நேரம் சற்று தேவை. எனினும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கிடுகுவேலி சொன்னது…

நன்றி அருண்மொழிவர்மன், நிச்சயமாக மறந்துவிட்டேன் ஸ்ரிவ் வோவ் என்ற மகத்தான சாதனையாளனை. ஆமாம் ஸ்ரிவ் வோவ் கூட சில சமயங்களில் சொதப்பி பின்னர் மீண்டவர்தான். ட்ராவிட்டும் அப்படி வரவேண்டும் என்பதே விருப்பம்.

கிடுகுவேலி சொன்னது…

நன்றி, The Rebal, உங்கள் வருகைக்கும் சான்றுக்கும் இடுகைக்கும் நன்றி.

புருனோ Bruno சொன்னது…

//புருனோ உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் நினைத்தாற்போல் அதை நிரூபிப்பதற்கு நேரம் சற்று தேவை. எனினும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.//

ராகுல் திராவிட் மேல் அளிக்கப்படும் அளவிற்கு அதிகமான புகழுரைகளுக்கு இது வரை புள்ளியியல் ஆதாரமில்லை என்று தான் நான் கூறி வந்தேனே தவிர ராகுல் திராவிட் மோசமான ஆட்டக்காரர் என்று கூறியதே இல்லை

He is a good player, in fact very good player, but media manipulations have made him appear as the best, which is not true

உங்கள் மறுமொழி அதை உறுதிபடுத்துகிறது :) :)

புருனோ Bruno சொன்னது…

//@Bruno Read This Post.Looks like you beleive only in Statistics.So here is it.

http://therebelspeakz.blogspot.com/2008/04/rahul-dravid-greatest-cricketer-ever.html

//

நீங்கள் அளித்துள்ள சுட்டியில் இருக்கும் ”ஆதாரங்கள்”

1. ராகுல் திராவிட் 10,000 ஓட்டங்களை பெற்றுள்ளார்

2. அப்பொழுது அவரது average லாரா மற்றும் சச்சினை விட அதிகம்

3. 9000 ஓட்டங்களை குறைந்த போட்டிகளில் பெற்றவர் திராவிட்

4. இந்தியா வென்ற ஆட்டங்களில் திராவிட்டின் அவரேஜ் 73.88 இது இந்தியா வென்ற ஆட்டங்களில் சச்சினின் ஆவரேஜை விட 10 ஓட்டங்கள் அதிகம்

5. இந்தியாவிற்கு வெளியில் விளையாடும் போது திராவிட்டின் அவரேஜ் அதிகம் 58.50, (சச்சின் 55.5, லாரா 47)

சரி

நான் கேட்ட ஆதாரம் என்னவென்றால்

1. திராவிட்டால் இந்தியா பெற்ற வெற்றிகள் எத்தனை என்று கூற முடியுமா

2. அது சச்சினால் பெற்ற வெற்றிகளை விட அதிகமா

3. அது சேவாக்கால் பெற்ற வெற்றிகளை விட அதிகமா

4. அது கங்குலியால் பெற்ற வெற்றிகளை விட அதிகமா

5. அது கும்ப்ளேயால் பெற்ற வெற்றிகளை விட அதிகமா

--

திராவிட் குறித்து நீங்கள் அளிக்கும் புள்ளி விபரங்களை நான் மறுக்க வில்லை

--

ஆனால் சச்சினை விட இந்தியாவிற்கு அதிக வெற்றிகளை பெற்று தந்தவர் திராவிட் என்பதை மறுக்கிறேன்

அதற்கு நீங்கள் ஆதாரமளிக்கவில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்

--

பசு மாடு பற்றி கட்டுரை எழுத சொன்னால் தென்னை மரம் பற்றி 2 பக்கம் கட்டுரை எழுதி விட்டு “இப்படிபட்ட தென்னை மரத்தில் பசுவை கட்டலாம்” என்று கடைசி வரி எழுதியதாக ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன்

:) :) :)

புருனோ Bruno சொன்னது…

//ட்ராவிட் நிறைய தடவைகள் வெற்றிக்காக உதவி செய்திருக்கிறார்//

இதை நான் மறுக்கவே இல்லை

ஆனால் நான் கூறிய மற்றவர்களை கணக்கில் எடுத்தால் இவரது ”நிறைய தடவைகள்” மிக குறைவே என்று உங்களுக்கே தெரிய வரும்

திராவிட்டால் இந்திய பெற்ற டெஸ்ட் வெற்றிகள் எத்தனை (இல்லை என்று நான் கூற வில்லை)
திராவிட்டால் இந்திய பெற்ற ஒரு நாள் வெற்றிகள் எத்தனை (இல்லை என்று நான் கூற வில்லை)

அதே போல் சச்சின், சேவாக், கங்குலி, லக்‌ஷ்மண் என்றும் பாருங்கள் என்று தான் கூறினேன்

நிருபியுங்களேன்.

ஏன் ஆதாரமில்லாமல் தொடர்ந்து தவறான தகவல்களையே கூறுகிறீர்கள்

கிடுகுவேலி சொன்னது…

புருனோ உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கிறேன். ஆனால் இங்கே ட்ராவிட் என்பவரைப் பற்றி மட்டும் கதைக்கிறோம். நிச்சயமாக நீங்கள் சொன்ன அத்தனை பேரும் வெற்றிக்காக உழைத்தவர்கள்தாம். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. ட்ராவிட்டினால் மட்டும் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது என்று சொல்லவில்லை. நன்றி.

Blogger சொன்னது…

புருனோ நீங்கள் என்னிடம் ஆதாரம் கேட்கிறீர்களே தவிர உங்கள் கருத்துகளுக்கு என்ன ஆதாரம்.மோகன் தாஸ் மேனனிடம் கூட இவ்வளவு விபரங்கள் இருக்காது.
வாதம் செய்யலாம் ஆனால் விதண்டாவாதம் ??
:-)

புருனோ Bruno சொன்னது…

//ஆனால் இங்கே ட்ராவிட் என்பவரைப் பற்றி மட்டும் கதைக்கிறோம்.//

ஏற்றுக்கொள்கிறேன்.

அப்படியென்றால் கீழ்க்கண்ட விவாதங்கள் ஏன்
//முன்னைய பதிவில் சொன்னது போல சச்சினா ட்ராவிட்டா மிகச்சிறந்த Match Winner என்று SPORTSTAR சஞ்சிகை நடாத்திய ஒரு விவாத்தில் எல்லோரும் ட்ராவிட்டைத்தான் சொன்னார்கள். சச்சின் வெற்றியின் காலை வாரிய போட்டிகளை பட்டியல் இட்டிருந்தார்க//

//Dravid has won Many Test Matches and one day international Matches than any other Indian cricketer.//

அவைகளை தான் நான் மறுப்பது

ட்ராவிட் என்பவரைப் பற்றி மட்டும் கதைக்கும் இடத்தில் அவரை உயர்த்த அடுத்த வீரர்களை மட்டம் தட்டும் போக்கை மட்டுமே நான் எதிர்த்தேன்.

தவறென்றால் மன்னிக்கவும் :) :)

புருனோ Bruno சொன்னது…

//உங்கள் கருத்துகளுக்கு என்ன ஆதாரம்./

ஏற்கனவே கூறிவிட்டேன்

cricinfo தளத்தில் இருக்கும் scorecardகள் தான் என் ஆதாரம்

chitra சொன்னது…

chitra:now he proved that is" he is a good player and he has an ebility to play well".today he scored 136 runs.and this runs is very helpful to increase the run rate and get good score because other all players are got little bit except gauthem.and after that he can be play well.
thaks to all supporters.

கிடுகுவேலி சொன்னது…

ஆமாம் சித்ராதேவி,

வணக்கம். வருகைக்கும் இடுகைக்கும் நன்றி. நீண்ட போரட்டத்திற்கு பின்னர் ட்ராவிட் மீண்டும் 'போர்ம்' ற்கு திரூம்பியுள்ளார். இது எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே. நன்றி.

கருத்துரையிடுக