செவ்வாய், 30 டிசம்பர், 2008

ஆடிப்போனது ஆஸ்திரேலியா...!

ஆஸ்திரேலியாதான் உலகின் முதல்தர அணி என்ற மகுடம் மெதுவாக சரிந்து கொண்டிருக்கிறது. இப்போது தென்னாபிரிக்காவின் கை ஓங்கியே வருகிறது.

தென்னாபிரிக்காவிற்கு இமாலய தொடர் வெற்றி. மெல்பேர்ன் மைதானத்தில் இன்றைய வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு பேரிடியாக மாறி உள்ளது. பெரும் தலைகள் உருளும் அபாயம் தோன்றியுள்ளது. குறிப்பாக மத்யூ ஹைடன். இவரின் கடைசி 15 இன்னிங்ஸ்சில் வெறும் 313 ஓட்டங்களே பெற்றார். இது ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்க்க முடியாத பெறுதி. இப்பொழுதே விமரிசனங்கள் பலவாறாக எழத்தொடங்கிவிட்டன. இப்போது ஹைடன் தலைவிதி தேர்வாளர்களின் கைகளில். வயதும் 37ஐத் தாண்டி விட்டது. பார்ப்போம்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்சில் சற்று பலமாக இருப்பதாகவே பட்டது. பொண்டிங் பெற்ற வேகமான சதம் (101), கிளார்க்(88) மற்றும் கட்டிச்(54) பெற்ற அரைச்சதங்கள் 394 என்ற ஓட்டங்கள் பெற உதவின. டேல் ஸ்ரைன் தன் பங்கிற்கு 5 விக்கட்டுக்களை சாய்த்தார். தென்னாபிரிக்க துடுப்பாட்டத்தில் சொதப்பியது. கிறீம் ஸ்மித் பெற்ற 62 ஓட்டங்கள் தவிர மற்றவர்கள் சோபிக்கத்தவறினர். 184-7 என்ற ஒரு மோசமான நிலையில் இருந்தனர். களத்தில் இருந்த போல் டும்னி பின்னால் வந்த வீரர்களை தன்னோடு சேர்த்து அனாசயமாக விளையாடினார். ஆஸ்திரேலியா பந்து வீச்சுகளை துவம்சம் செய்து மெதுவாக முன்னேறினர்.


யாருமே எதிர்பார்க்க முடியாத இணைப்பாட்டம் ஒன்றினை டும்னியும் டேல் ஸ்ரைனும் ஏற்படுத்தி ஆஸ்திரேலியாவிற்கு தலையிடி கொடுத்தனர். இருவரும் தம்மிடையே 180 ஓட்டங்களை பகிர்ந்தனர். டும்னி தன்னுடைய கன்னி சதத்தைப் பெற்றார். ஸ்ரைனும் தன்னுடைய கன்னி அரைச்சதத்தைப் பெற்றார். ஒரு ஆஸ்திரேலியர் CricInfo இணையத்தளத்தில் எழுதியிருந்தார். ஸ்ரைன் சதம் அடித்தால் தான் ஆஸ்திரேலியாவிற்கான தந்து குடியுரிமையை கைவிடப்போவதாக. அந்தளவு கடுப்பில் ஆஸ்திரேலியர் இருந்தனர். ஆனால் தூரதிஷ்டவசமாக ஸ்ரைன் சதம் பெறாமல் 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டும்னியும் 166 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்கா இப்போது 459 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

பந்துவீச்சில் சிடில் 4, ஹோரிட்ஸ் 3. ஆஸ்திரேலியவின் இரண்டாவது இன்னிங்ஸ் முதலாவதை விட மோசமாக இருந்தது. விக்கட்டுகள் ஒரு சீரான இடைவெளிகளில் வீழ்ந்து கொண்டிருந்தது. ஆனாலும் முதல் இன்னிங்ஸ்சில் சதமடித்த பொண்டிங் இம்முறையும் பொறுப்பாக விளையாடினார். ஆனால் மனிதர் தன்னுடைய 38வது சதத்தை வெறும் ஒரு ஓட்டத்தால் தவறவிட்டார். இப்போ ஆஸ்திரேலியா 247 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. வெற்றி இலக்கான 183 இனை தென்னாபிரிக்கா ஒரு விக்கட்டை மட்டும் இழந்து பெற்றனர். மகத்தான வெற்றி தென்னாபிரிக்காவிற்கு. அது மட்டுமல்ல தொடரையும் கைப்பற்றிவிட்டனர்.

  • மைக்கல் ஹசி, மத்யூ ஹைடன் துடுப்பாட்ட பெறுதிகள் மிக மோசமாக உள்ளது. பந்து வீச்சில் பிரெட் லீ இடையில் காயப்பட்டு அதிக நேரம் பந்து வீசவில்லை.

  • ஆஸ்திரேலியாவில் வைத்து தென்னாபிரிக்கா பெற்ற முதலாவது தொடர் வெற்றி இது.

  • ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் 1991-92 பருவகாலத்தில் மேற்கிந்தியரிடம் 2-1 என தோற்ற பின்னர் ஒருதொடரை இழப்பது இதுவே 17வருடத்தின் பின் முதல் தடவை.
  • கடைசியாக விளையாடிய 10 தொடர்களில் தென்னாபிரிக்கா இன்னமும் ஒரு தொடரை தன்னும் தோற்கவில்லை.

  • இந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் வரிசையில் ஸ்மித் 15 போட்டிகளில் 1656 ஓட்டங்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். பந்து வீச்சில் டேல் ஸ்ரைன் 13 போட்டிகளில் 74 விக்கட்டுக்கள் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியர் காலம் அஸ்தமித்து கொண்டு வருகிறதா என எண்ணத் தோன்றுகிறது. தோல்வியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா அண்மைக்காலமாக தடுமாறியே வருகிறது.

தென்னாபிரிக்காவும் இந்தியாவும் பெரும் எழுச்சி கண்டுள்ளன. அடுத்த போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் தொடரின் எல்லாப் போட்டிகளையும் வென்ற White Wash வெற்றி. இது ஆஸ்திரேலியாவின் முதலாம் ஸ்தானத்தை தகர்க்கலாம். அடுத்த போட்டி சிட்னி மைதானத்தில் புதுவருடத்தில் ஜனவரி 3. இந்த வருடம் ஆஸ்திரேலியர்களுக்கு பெரும் சோதனை வருடம். இந்தையாவிடம் தொடர் தோல்வி. இப்போ தென்னாபிரிக்காவிடாம். மீண்டும் ஆஸ்திரேலியா துளிர்க்குமா? அல்லது வாடிவிடுமா?

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

No way they can't man. everything is a cycle. so there should be other country on top for some years. india also fighting for top seat.so wait and see.

கிடுகுவேலி சொன்னது…

நிச்சயமாக, எல்லாம் ஒரு வட்டம்தான். ஆஸ்திரேலியாவின் காலம் முடிவுக்கு வருகிறது போலத்தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி அனானி வருகைக்கும் இடுகைக்கும்.

பெயரில்லா சொன்னது…

அவுஸ்ரேலியாவிற்கு புதுரத்தம் பாய்ச்சவேண்டிய தருணம்

பெயரில்லா சொன்னது…

தென்னபிரிக்க நிசமாலுமே ஒரு திறமையானதும் அபாயமானதுமான அணி அதிலும் சிமித் எனக்கு ரொம்பவே பிடிக்க்கும், சாதித்தது தென்னபிரிக்கா

கிடுகுவேலி சொன்னது…

கிறீம் ஸ்மித் இளம்வீரர். எப்பொழுதும் தன்னுடைய பாணியாகிய அடித்து ஆடுதலையே கையாள்வார். இப்பொழுது நல்ல அணித்தலைவர் ஆகவும் பரிணமிக்கிறார். நிச்சயமாக ஆஸ்திரேலியா அணியின் தலைக்கனம் குறைந்திருக்கும். மாற்றம் இதுதான் மாறாதது. நன்றி கவின் வருகைக்கும் இடுகைக்கும்.

அருண்மொழிவர்மன் சொன்னது…

இது பற்றி சென்ற வாரம் நான் கூட ஒரு பதிவெழுதி உள்ளேன்.

//ஆஸ்திரேலியா அணியின் தலைக்கனம் குறைந்திருக்கும்//
ஆனால் அவர்கள் சரியான உழைப்பின் மூலமும் நிறைய வெற்றிகளை அனுபவித்தவர்கள். அதேசமயம் தமது நிறாவெறிக் கருத்துகளால் எப்போதும் மற்ற அணியினரை மட்டம் தட்டும் பழக்கம் உடையவர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி இனி சிறிது காலம் நாங்கள் அற்புதமான சில போட்டிகளை பார்க்கமுடியும்

கிடுகுவேலி சொன்னது…

அவர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றிகள் என்றாலும் அவர்கள் இறுமாப்புடனேயே வலம் வந்தவர்கள். எதிரணியை 'வெருட்டி' வெல்லும் உபாயம் கொண்டவர்கள். இனிமேல் அந்தப்பருப்பு பெரிதாக வேகாது. நன்றி அருண்மொழிவர்மன். உங்கள் வருககைக்கும் இடுகைக்கும்.

தமிழ் மதுரம் சொன்னது…

கதியால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது ஒஸ்ரேலியாவுக்குப் பொருந்தும்... என்னதான் இருந்தாலும் அவர்கள் மீண்டும் எழுவார்களா?? பொறுத்திருப்போம்....

கிடுகுவேலி சொன்னது…

இந்தப்போட்டியில் கமல் ஆஸ்திரேலியா எல்லாத்துரைகளிலும் கோட்டை விட்டது. குறிப்பாக களத்தடுப்பில் அவர்களின் அசமந்தம் நல்லதல்ல. Catches Win Matches. அவர்கள் விட்ட பிடிகள் அது போட்டியை விட்டது போலத்தான். எதற்கும் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாதுதான். பொறுத்திருந்து பார்ப்போம்.

ARV Loshan சொன்னது…

நன்றி கதியால்.. இப்ப தான் நான் ஆஸ்திரேலிய அணி பற்றிப் பதிவு போட்டேன்.. தற்செயலாக உங்கள் பதிவைப் பார்த்தால் நீங்கள் ஏற்கெனவே போட்டுள்ளீர்கள்.. நல்ல பார்வை.. ஆனால் இருவரும் வேறு வேறு முறைகளில் பார்த்துள்ளோம்.. :)

ஆஸ்திரேலியா மறுபடி எழும்.. ஆனால் கொஞ்சக் காலம் எடுக்கும்.. அதுவரை தென் ஆபிரிக்காவா இந்தியாவா என்பது தான் சுவாரஸ்யமான போட்டி..

பி.கு.. இன்று மாலை என் பதிவில் தென் ஆப்ரிக்க பற்றி எழுதப் போகிறேன்.. முந்தி விட வேண்டாம்.

கிடுகுவேலி சொன்னது…

நன்றி லோஷன். உங்கள் வருகைக்கும் இடுகைக்கும். நீங்கள் உங்கள் பாணியில் மிக அழகாக சொல்வீர்கள். தொடருங்கள். ஹாஹாஹாஹா என்னுடைய அடுத்த பதிவு கிரிக்கட் பற்றி இல்லை. நன்றி லோஷன் வருகைக்கும் இடுகைக்கும்.

கருத்துரையிடுக