சனி, 20 ஜூன், 2009

அரையிறுதியும் இறுதியும்.....!

மேற்கிந்தியாவின் தோல்வி
========================
வெற்றிக்களிப்பும் சோக வடுவும்

நேற்றைய 20-20 அரையிறுதிப்போட்டியில் மேற்கிந்தியா தோற்க வேண்டும் என்று விளையாடி அதில் வெற்றி கண்டு இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் தமது நாடு திரும்புகிறார்கள். சிறீலங்கா வெல்ல வேண்டும் என்று விளையாடி அதிலே வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்கிறார்கள். அங்கே பாகிஸ்தானுடன் மோத உள்ளார்கள்.

மேற்கிந்தியரின் பொறுப்பற்ற ஆட்டம் எரிச்சலையே எவனுக்கும் தரும். கிறிஸ் கைல் அரைச்சதம் பெற்றார். அடுத்த கூடிய ஓட்டம் பெற்றவர் 'திருவாளர்' உதிரி. மிகுதி 10 பேரும் ஒற்றை இலக்கத்துடனேயே ஆட்டம் இழந்தனர். போவதும் வருவதுமாக இருந்தார்கள். மேற்கிந்தியர்களுக்கு அதிர்ஷ்டம் வேறு போட்டு வாங்கியது. முதலாவது ஓவரிலேயே எல்லாம் முடிந்தது போல ஆகிவிட்டது. அஞ்சலோ மத்தியூஸ் அதிசயம் நிகழ்த்தினார். (ஏன் நிகழ்த்தினால் என்ன? யுவ்ராஜ் சிங் மாத்திரம் 2 ஹட்ரிக் எடுக்கலாம், ரோஹித் சர்மா ஹட்ரிக் எடுக்கலாம், இவர் நிகழ்த்த முடியாதா என யாரும் கேட்க வேண்டாம்) அதிசயம் தானய்யா இது! முதல் ஓவரிலேயே மூன்று விக்கட். மூன்றும் நேரடியாக விக்கட். அதுவும் துடுப்பில் பட்டு. ஒன்று தொடை காப்பிலே பட்டது. இப்படித்தான் முதல் ஓவர் 1 w 0 w 0 w. வேணாம் விளையாட்டு என்றாகிவிட்டது. எனக்கு கிரிக்கட்டில் பிடிக்காத அவுட் இந்த துடுப்பில் பட்டு விக்கட்டில் படுவது ( 'இன்சைட் எட்ஜ்'. ). ஒரு போட்டி. ஒரு ஓவர். ஒரு மூன்று விக்கட். இப்பொழுதே இணையங்கள் தொடங்கிவிட்டன. Beware Angelo Mathews, The Fourth 'M' (நன்றி : கிரிக்கெட்வேர்ல்ட்) . முரளி, மலிங்கா, மெண்டிஸ், மத்தியூஸ். ம்ம்ம்ம்ம். பார்ப்போம்.
நாலாவது 'M'
பின்னர் வந்து ஆடியவர்களோ உங்களை வெல்லப்பண்ணுவதே எமது நோக்கம் என்பது போல விக்கட்டுக்களை தாரை வார்த்து கொடுத்தனர். சிரிப்பதா அழுவதா என்று இருந்த ஆட்டம் ஜெரோம் ரெய்லர் உடையது. மனிதர் அண்மையில் நியூசிலாந்திற்கு எதிராக சதம் அடித்தவர் நியூசிலாந்தில் வைத்து. நான் அவரை நம்பி இருந்தேன் ஒரு ஓட்டமாக பெற்று கிறிஸ் கைல் இற்கு துடுப்பாட வாய்ப்பு கொடுப்பார் என்று. அவரோ தன்னை நம்பியே மேற்கிந்தியா இருக்கு என வானத்துக்கு பட்டம் விடுகிறார். அதுவும் முரளியின் பந்துக்கு. முரளிக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து கைல் ஆடினார் என்று போட்டியை பார்த்தவர்களுக்கு தெரியும். துடுப்பு பிடித்து பழக்கம் இல்லாத எமக்கு தெரிந்த பொது அறிவு கூட ரெய்லரிடம் இல்லை என்பதை நினைக்க வேதனையாக இருந்தது.

நான் மட்டும் போதுமா...?
மேற்கிந்தியரிடம் பிடித்ததும் பிடிக்காததும் ஒன்றே ஒன்று. விளையாட்டை விளையாட்டாய் விளையாடுவது. கொஞ்சம் கூட அக்கறை இல்லை. அடி அடி என்று அடித்து நொருக்குவார்கள். அடுத்த போட்டியிலேயே அவர்களா இவர்கள் என்று எண்ண வைப்பார்கள்.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவர் யூனிஸ்கானின் தலைமைத்துவத்தை நான் நன்றாக ரசித்தேன். சங்கக்கார மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் அவர் சரியான பதட்டக்காரர் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார். வெற்றி பெறும் நேரம் வந்த உடன் மட்டும் ஓடி வந்து பந்து வீச்சாளரிடம் அடிக்கடி உரையாடுகிறார். கிறிஸ் கைல் சலனமற்ற சடலம் போன்ற மனிதனாக மைதானத்துக்குள்ளே. இயல்பாகவே அந்த மனிதர் ஒரு சோம்பேறி போல இருப்பவர். அவருடைய துடுப்பாட்டமும் அப்படித்தான் இருக்கிறது என் எண்ணுகிறேன். காரணம் அடிப்பதில் 70% ற்கு மேல் ஆறும் நான்கும். ஓட அவருக்கு 'பஞ்சி' என கருதுகிறேன். கைல் தலைவர் என்ற அந்த பதவிக்கான துடிப்பான மனிதர் இல்லை என்பது என் கருத்து.

டில்ஷான் ஒரு புறம் பெரும் வியப்பான மனிதராகி விட்டார். வேறு யாராவது 'அப்படி' அடித்தால் 'அந்த' அடியை 'டில்ஷான் ஷொட்' எனும் அளவிற்கு பெயர் எடுத்துவிட்டார். முன்பும் இப்படித்தான் சிம்பாப்வே யின் டக்லஸ் மரிலியர் விளையாடினார். அவரும் இந்த 'ஷொட்' மூலம் ரொம்ப பிரபலமாகி இருந்தார். நேற்றைய போட்டியில் சனத் ஜயசூர்யா தட்டுத்தடுமாற (37 பந்தில் 24) டில்ஷான் பொழந்து கட்டினார். கடைசிப்பந்தில் 6 அடித்தால் சதம். ஆனால் 2 ஓட்டம் மட்டும் எடுத்து 57 பந்தில் 96 ஓட்டங்கள். ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக வந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோன்றுதான் கிறிஸ் கைலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கிந்தியரின் இரண்டு அற்புதமான பிடி தவிர களத்தடுப்பு மிக மிக மோசமாகவே இருந்தது. மேலதிக ஓட்டங்களை கொடுத்தமை, ரன்-அவுட் களை தவறவிட்டமை என்பவற்றுக்குமப்பால் துல்லியமற்ற பந்து வீச்சும் அவர்களுக்கு வினையாக அமைந்து விட்டது. நல்ல அணி. ஏனோ தோற்று விட்டார்கள். இறுதியில் கிறிஸ் கைல் இனை பேட்டி எடுக்கும் போது அழத் தொடங்கி விடுவாரோ என்று இருந்தது. தனியாக இருந்து இழுத்து வந்தார் அணியை. அவருக்கு எவரும் தோள் கொடுத்து ஆடவில்லை. இதே நிலைமைதான் டில்ஷானுக்கும். அவரும் தனியாகத்தான் கை கொடுத்தார். அதே நேரம் வெற்றியை தேடிக் கொடுத்து போட்டியின் நாயகனாகினார்.

இறுதிப்போட்டி ஒரு கண்ணோட்டம்
================================
இப்போது 'போஸ்' ற்காக நட்பு. பின்னர் போட்டிக்காக மோதல்
ஞாயிறு இறுதிப்போட்டி. பாகிஸ்தானா? இலங்கையா? இலங்கை இதுவரை தோற்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் அசத்தும் முன்னேற்றம். உமர் குல் பந்துகள் எல்லாம் மிரட்டுகின்றன. அவருக்கு ஏற்றாற் போல இங்கே மலிங்க. அங்கே பாகிஸ்தானில் அப்ரிடி, அஜ்மல். இங்கே முரளி, மெண்டிஸ். துடுப்பாட்டத்தில் பல வேறுபாடுகள். அப்ரிடியும் ஜயசூர்யாவும் அடித்தாடினால் எதிரணி நிலைமை மோசம். களத்தடுப்பு இரண்டு அணிகளும் நன்றாகவே செய்கின்றன. ஆனால் பொதுவாக பாகிஸ்தான் களத்தடுப்பில் சொதப்புவது வழமை. யூனிஸ்கானின் அனுபவமான தலைமைத்துவம் இங்கே இல்லை. ஆனால் இங்கே ஜயசூர்யா, மஹேல போன்றவர்களின் ஆலோசனை களத்திலே கிடைக்கும். பார்ப்போம் எப்படி இறுதிப்போட்டி என்று. மைதான ஆதரவு இலங்கைக்கு அதிகமாக இருக்கலாம். காரணம் இந்திய ரசிகர்கள் அதிகம் இலங்கைக்கு ஆதரவாக இருப்பார்கள். ஒன்று பாகிஸ்தான் அவர்களின் பரம வைரி. அடுத்தது இம்முறையும் இந்தியாவிற்கே கோப்பை என்ற எண்ணத்தில் அனுமதிச்சீட்டு வாங்கி வைத்திருப்பார்கள். அடுத்தது......வேணாம் விடுங்கள். போட்டியை பார்ப்போம்.

20 கருத்துகள்:

rooto சொன்னது…

சங்ககார அனுபவமற்ற கப்டனா?? அவரது சில அணுகுமுறைகள் மிக நேர்த்தியாக உள்ளது. அதிஸ்ட்டம் கை கொடுக்கிறது எண்டு சும்ம சொல்லகூடாது.(நாம இலங்கையன் எண்டாலும் இலங்கை தோற்கவேணும் என்பதுதான் பிரார்த்தனை,அதுக்காக நான் பகிஸ்தானுக்கு ஆதரவளிக்க மாட்டேன். - தமிழனாய் பிறாந்து தொலைத்துவிட்டேன், கிரிக்கெட்டில் கூட அது துரத்துகிறது, விளயாட்டுதானே எண்டு சொல்லமுடியாது ஏனெனில் இலங்கை வெண்டால் அவர்களது அளப்பற தாங்க முடியாது)

கிடுகுவேலி சொன்னது…

// rooto said...
சங்ககார அனுபவமற்ற கப்டனா?? அவரது சில அணுகுமுறைகள் மிக நேர்த்தியாக உள்ளது.....//

சங்கக்கார நல்ல அனுபவ வீரர். அனுபவமான தலைவாரா என்றால் இல்லைத்தானே. அதனால்தான் அப்படி குறிப்பிட்டேன். பதட்டம் தெரிகிறது.

//...இலங்கை தோற்கவேணும் என்பதுதான் பிரார்த்தனை,அதுக்காக நான் பகிஸ்தானுக்கு ஆதரவளிக்க மாட்டேன்.இலங்கை வெண்டால் அவர்களது அளப்பற தாங்க முடியாது..//

என்னதான் உங்க திட்டம்....

பெயரில்லா சொன்னது…

அருமையான ஆய்வு.
ஒரு காலத்தில் நான் இலங்கை அணியின் மிகத் தீவிரமான ரசிகன் என்ன தான் இருந்தாலும் அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று என்னை தேற்றி கொள்வேன் முள்ளிவாய்க்கால்கள் முளைத்த பிறகு இப்போது சிங்க கொடிகள் கண்ட மாத்திரத்திலேயே வெறுப்பு தான் வருகிறது இலங்கை அணி தோற்க வேணும் என்று தொலை காட்சி பெட்டிக்கு முன்னால் தவம் கிடந்தேன் ஆனால் மேற்கு இந்தியர்களின் சின்ன பிள்ளை தனமான ஆட்டம் வெறுப்பையே தந்தது பாகிஸ்தான் ஆவது இலங்கைக்கு ஆப்பு வைக்கிறதா என்று பார்ப்பம்

நான் இந்த வலை பதிவிற்கு முற்றிலும் புதியவன் தயவு செய்து உங்களை பின் தொடர்பவர்களுடன் என்னையும் இணைத்து கொள்வீர்களா

எவனோ ஒருவன் சொன்னது…

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

இன்றைய இறுதி ஆட்டமும், இந்திய அணியின் தோல்வியும்

படித்துவிட்டீர்களா..?

உங்கள் அளவு விவரித்து இல்லாவிட்டாலும் ஒரு ஓரமாக என் கருத்து ....,

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

ஓட்டுக்கள் போட்டாச்சு தல,,,

சி தயாளன் சொன்னது…

:-))

வலசு - வேலணை சொன்னது…

வர்ணனை அபாரமாய் இருக்கிறது.

புழுதிப்புயல் சொன்னது…

என்னை பொறுத்தவரை மேற்கிந்தியதீவுகளுக்கு தன்னம்பிக்கை அதிகம் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.. தாங்கள் விக்கட் இழப்பதிலும் சளைத்தவர்கள் இல்லை என்று நிருபித்து விட்டார்கள். மேலும் "கைல்" இன் பொறுப்பின்மையும் இதற்க்கு முக்கிய காரணம்.. அணித்தலைவராக மட்டும் இல்லாமல், நல்ல சக துடுப்பாட்ட வீரனாக கூட அவர் செயற்படவில்லை. எதோ தான் மட்டும் அடித்தால் போதும் என்று விளையாடினார். "முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு" என்பதை போல், மலிங்காவின் ஓவர் முடிய 3 பந்து இருக்கும் போதே ஒரு ஓட்டம் எடுத்துக்கொண்டு மறு முனைக்கு சென்று, மலிங்கவுக்கு ஒரு விக்கட்டை பரிசளித்தார். பெரிய மனசு அவருக்கு. என்னத்த சொல்ல.. பாப்பம் பாகிஸ்தானும் எங்களை ஏமாத்தாமல் இருந்தால் நல்லம் எண்டு நினைக்கிரன்..

புழுதிப்புயல் சொன்னது…

//சங்ககார அனுபவமற்ற கப்டனா?? அவரது சில அணுகுமுறைகள் மிக நேர்த்தியாக உள்ளது. அதிஸ்ட்டம் கை கொடுக்கிறது எண்டு சும்ம சொல்லகூடாது.//
ரூடோ... மத்தியுஸ் மட்டும் அதிஸ்டவஸமா 3 விக்கட் (அதை அதிஸ்டம் எண்டு தானே சொல்ல வேணும்)எடுக்காமல் இருந்திருந்தால் அவரிண்ட பதட்டத்தை நீங்கள் கண்குளிர பாத்திருப்பிங்கள்...

பூச்சரம் சொன்னது…

பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

http://poosaram.blogspot.com/

கிடுகுவேலி சொன்னது…

//....எவனோ ஒருவன் said...
அருமையான ஆய்வு.
ஒரு காலத்தில் நான் இலங்கை அணியின் மிகத் தீவிரமான ரசிகன் என்ன தான் இருந்தாலும் அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று என்னை தேற்றி கொள்வேன் முள்ளிவாய்க்கால்கள் முளைத்த பிறகு இப்போது சிங்க கொடிகள் கண்ட மாத்திரத்திலேயே வெறுப்பு தான் வருகிறது இலங்கை அணி தோற்க வேணும் என்று தொலை காட்சி பெட்டிக்கு முன்னால் தவம் கிடந்தேன் ஆனால் மேற்கு இந்தியர்களின் சின்ன பிள்ளை தனமான ஆட்டம் வெறுப்பையே தந்தது பாகிஸ்தான் ஆவது இலங்கைக்கு ஆப்பு வைக்கிறதா என்று பார்ப்பம்

நான் இந்த வலை பதிவிற்கு முற்றிலும் புதியவன் தயவு செய்து உங்களை பின் தொடர்பவர்களுடன் என்னையும் இணைத்து கொள்வீர்களா?
...//

வணக்கம், எவனோ ஒருவன்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. விளையாட்டு மூலம் அரசியல். அரசியல் மூலம் விளையாட்டு. இதுதான் இன்றைய அரசியல் சித்தாந்தம் போல இருக்கிறது.

உங்களோடு நானும் இணைந்துள்ளேன்.

கிடுகுவேலி சொன்னது…

//.. SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுக்கள் போட்டாச்சு தல,,,

...////

'தல' வா? வேணாம் சாமி ஆளை விடுங்க...!

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் டொன் லீ,

வருகைக்கு நன்றி..!

கிடுகுவேலி சொன்னது…

//.... sutharshan said...
என்னை பொறுத்தவரை மேற்கிந்தியதீவுகளுக்கு தன்னம்பிக்கை அதிகம் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.. தாங்கள் விக்கட் இழப்பதிலும் சளைத்தவர்கள் இல்லை என்று நிருபித்து விட்டார்கள். மேலும் "கைல்" இன் பொறுப்பின்மையும் இதற்க்கு முக்கிய காரணம்.. அணித்தலைவராக மட்டும் இல்லாமல், நல்ல சக துடுப்பாட்ட வீரனாக கூட அவர் செயற்படவில்லை. எதோ தான் மட்டும் அடித்தால் போதும் என்று விளையாடினார். "முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு" என்பதை போல், மலிங்காவின் ஓவர் முடிய 3 பந்து இருக்கும் போதே ஒரு ஓட்டம் எடுத்துக்கொண்டு மறு முனைக்கு சென்று, மலிங்கவுக்கு ஒரு விக்கட்டை பரிசளித்தார். பெரிய மனசு அவருக்கு. என்னத்த சொல்ல.. பாப்பம் பாகிஸ்தானும் எங்களை ஏமாத்தாமல் இருந்தால் நல்லம் எண்டு நினைக்கிரன்..

..//

* ஆனால் கைல் நன்றாக அடித்து ஆடக்கூடியவர். அவருக்கு துணையாக யாரும் ஆடவில்லை.

* ம்ம்ம் அந்த ஓட்டத்தை அவ ஓடாது தவிர்த்திருக்கலாம்.

கிடுகுவேலி சொன்னது…

// வலசு - வேலணை said...
வர்ணனை அபாரமாய் இருக்கிறது.
..//

ஏதோ எங்களால் முடிந்தது.....!
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....!

கிடுகுவேலி சொன்னது…

//... பூச்சரம் said...
பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

http://poosaram.blogspot.com/

..//

விரைவில் இணைந்து கொள்வேன் நன்றி...!

gulf-tamilan சொன்னது…

t 20 final pakistan won by 8 wickets !!!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

கிரிகெட் பற்றி அவ்வளவாக தெரியாது நண்பரே,.. உங்களின் தொகுப்பு நன்றாக உள்ளது பாராட்டுகள்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

கிடுகுவேலி சொன்னது…

வணக்கம் ஞானசேகரன்,
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..!

கருத்துரையிடுக