வியாழன், 27 நவம்பர், 2008

கண்ணுபடப்போகுதையா....!


தோனி இந்தியாவின் இப்போதைக்கு கிடைத்திருக்கும் ஒரு புதையல். தொட்டதெல்லாம் துலங்குவது போல, கிரிக்கட்டில் வெற்றிகளாக குவிக்கிறார். எங்கேயோ இருந்த இந்தியா, இன்று உச்சானிக்கொம்பில். இப்ப வையுங்கடா உலகக்கோப்பையை நாம ஜெயித்து காட்டுறோம் என்ற நிலை.


பீட்டர்சனால் இனி என்னதான் செய்ய முடியும் என்ற நிலை. இந்த தொடரில் எவராலும் எதையும் செய்ய முடியாது என்று இந்தியா நிரூபித்துள்ளது. துடுப்பாட்டமா அது 8ம் இலக்கம் வரைஇ நீளுகிறது. களத்தடுப்பா பாய்ஞ்சு பாய்ஞ்சு ஜமாய்க்கிறார்கள். பந்துவீச்சா சொதப்பியவர்கள் எல்லாம் இப்போ துல்லியம். யுவராஜ் கூட அசத்துறார்.


போங்கோடா, உங்களோட விளையாட முடியா நம்மால என இங்கிலாந்து வெளியேறினாலும் ஆச்சரியப்பட இல்லை. பிரமாதம். ஆனால் இது தொடர்ந்தும் நீடிக்க வேண்டும்.


20-20 உலகக்கிண்ணம், ஆஸ்திரேலியா விபி கிண்ணம், பாகிஸ்தான் தொடர்,இலங்கைத் தொடர், என எல்லாம் வெற்றிகளே! இடையில் ஆசியக்கிண்ணம் தவிர.


நல்ல முகமைத்துவம். களத்தடுப்புக்கு பாயும்புலி ரொபின் சிங், பந்துவீச்சுக்கு Slow Ball Specialist வெங்கடேஷ் பிரசாத், பயிற்சியாளர் கரி கிர்ஸ்டன் என எல்லோரும் ஆலோசனைகளை மைதானத்துக்கு வெளியே வழங்க உள்ளே வீரர்கள் பொழந்து கட்டுகிறார்கள்.


இந்தியர்கள் எல்லோரும் நல்ல போர்மில் உள்ளார்கள். இவர்களுக்கு முன்னால் இங்கிலாந்தின் பந்துவீச்சு எடுபடவில்லை. இந்தியர்கள் பிளிண்டொவ் இற்கு மட்டும் கொஞ்சம் மரியதை கொடுத்து விளையாடுகிறார்கள். ஆனாலும் ஓட்டவிகிதம் எகிறும் போது அவரும் வாங்கிக்கட்டுகிறார்.


சஹீர்கான் நிஜமாகவே மிரட்டுகிறார். அவரது முன்னேற்றம் அசர வைக்கிறது. ஆஸ்திரேலியர்களையே மிதித்தவர்களுக்கு அதுவும் அவர்களது கோட்டைக்குள் மற்றவர்கள் எல்லாம் காற்தூசிக்கு சமம்.


வலுவான் அணி இப்போது இந்தியா. இந்த போக்கில் போனால், ஆஸ்திரேலியர்களின் ஒன்னாம் நம்பர் கனவுக்கு ஆப்புத்தான்.


சஹீர்கான் களத்தடுப்பினை சக பந்துவீச்சாளருக்கு ஒழுங்கமைக்கும் போது தோனி வழிவிடுகிறார். மற்ற அணித்தலைவர்கள் விட்ட தவறுகளை இவர் சீர் செய்கிறார்.


ஒரு நாள் போட்டி என்று வந்துவிட்டல் தோனி நன்றாக ஆடுகிறார். அடிக்க வேண்டிய இடத்தில் முழங்கியும், ஆறுதலான் நேரத்தில் அமைதியாகவும் ஆடுகிறார். நேரத்திற்கு தகுந்த ஆட்டத்தினை இப்போது தோனி கையாளுகிறார்.


சரி இவை தொடருமா....? தொடர வேண்டும் என்பதே எல்லோர் விருப்பமும். ஆனால் இந்திய கிரிக்கட் வீரர்கள் எப்பொழுது சொதப்புவார்கள் என தெரியாது. பொறுத்த நேரத்தில் கோட்டை விட்டு விட்டு ரசிகர்களிடம் கல்லெறி வாங்குவார்கள். பார்ப்போம் வெற்றிப்பயணம் எதுவரை என. ஆஸ்திரேலியா தற்பொழுது அடங்கிவிட்டது. இவர்கள் அதை தொடர்வார்களா...? இதுதான் இப்போதுள்ள வலுவான வினா.....!

5 கருத்துகள்:

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

கிண்ணம், /////





super

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

பாயும்புலி /////



thalapathi, nayakan,

கிடுகுவேலி சொன்னது…

நன்றி சுரேஷ். வருகைக்கும் இடுகைக்க்கும். நிஜமாக ரொபின் சிங் ஒரு நல்ல களத்தடுப்பாளர்.

அருண்மொழிவர்மன் சொன்னது…

இந்தியாவின் அதிரடி ஃபீல்டிங்கும், துள்ளும் இளமையும் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரிதியில் பிற்பட்டவர்களும், நடுத்தர குடும்பத்தினரும் அணிக்குள் நுழைந்ததால் ஒரு aggresiveness அணிக்குள் நுழைந்துவிட்டது.

கிடுகுவேலி சொன்னது…

இளமைதான் இதற்கு காரணம். எனவேதான் ஒவ்வொருவரும் தாங்கள் தங்களுடைய இடத்தை தக்க வைக்கவேண்டும் என்பதற்காக நன்றாக விளையாடுகிறார்கள். எனவே அணியோடு நன்றாக ஒத்துழைத்து விளையாடுகிறார்கள். இது தொடர வேண்டும் என்பது எல்லோர் விருப்பமும்.

கருத்துரையிடுக